Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

தொண்டை கரகரப்பு, தொண்டை வலி குறைய - 1

தேன்தொண்டைப்புண் குறைய‌


மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து விட்டு சூடேற்றி தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.
                                                         


அறிகுறிகள்: தொண்டைப்புண். தொண்டை வலி.



மிளகுத்தூள் தேன் கிராம்புத்தூள்



தேவையான பொருள்கள்:

கிராம்புத்தூள்.
மிளகுத்தூள்.
தேன்.

செய்முறை:

1 தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து 1 டம்ளர் நீர் விட்டு சிறிது சூடேற்றி எடுத்து அதில் சிறிது தேன் கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.


தொண்டை கரகரப்பு குறைய
=============================
                                                                        

வல்லாரைச் சாறு அரிசித்திப்பிலி வல்லாரைச் சாறு
 வல்லாரை சாறு.....அரிசி திப்பிலி........வல்லாரை சாறு


அறிகுறிகள்:

தொண்டை கரகரப்பு.

தேவையான பொருட்கள்:

வல்லாரை சாறு.
அரிசித்திப்பிலி.

செய்முறை:

வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் அரிசித்திப்பிலியை ஏழு முறை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவேண்டும். உலர்த்திய அரிசித்திப்பிலியை சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.


தொண்டை நோய்கள் குறைய
==============================


அறிகுறிகள்:                                      

தொண்டை வலி.
தொண்டை கரகரப்பு.
தொண்டையில் ஏற்படும் புண்.

பூவரசம் பட்டை பூவரசம் வேர் பூவரசம் பட்டை


தேவையான பொருட்கள்:

பூவரசமர வேர், பட்டை.

செய்முறை:

பூவரசமர வேர், பட்டை இரண்டையும் இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து கொப்பளித்து வந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள் குறையும்.


தொண்டைக்கட்டு குறைய
==========================

அறிகுறிகள்:                                                   

தொண்டைக்கட்டு.
குரல் கரகரப்பாக காணப்படுதல்.
தொண்டை வலி.

தேவையான பொருட்கள்:

அரச மரப்பட்டை.

அரச மரப்பட்டை அரச மரப்பட்டை அரச மரப்பட்டை

செய்முறை:

அரச மரப்பட்டையை வெட்டி எடுத்து அதன் புறனியை நீக்கி அதாவது வெளிப்புறத் தோலை சீவிவிட்டு உட்புறப் பட்டையை மட்டும் எடுத்து நன்கு துண்டாகப் பொடித்து வெயிலில் உலர்த்தி கல்லுரலில் இடித்து தூள் செய்து துணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த தூளை இரண்டு சிட்டிகை எடுத்து நீரில் ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு குறையும்.


தொண்டைப்புண் குறைய
=========================


அறிகுறிகள்:                                   

தொண்டைப்புண்கள்.
தொண்டை வலி.
தொண்டை கரகரப்பு.

வெங்காயம் தேன் வெங்காயம்

தேவையான பொருள்கள்:

வெங்காயம்.
தேன்.

செய்முறை:

வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தேன் ஊற்றி மூடி நன்றாக ஊறும் வரை வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண்கள் குறையும்.













Followers

Comments Please...